மெலிவு ,சமன், வலிவு என்ற மூன்று வகை சுருதியிலும் சுரதானத்துக்குரிய துளைகளை முறையே மென்மையாக - சமமாக - வன்மையாக - மூடி இடையிட்ட துளைகள் உரிய அளவு பெற அசைத்து இயக்கி சிவந்த களி போன்ற உதடும் குழலின் துளை வாயும் ஒன்று கூடி இயங்க இசைநூல்களில் அளவு படுத்தியபடி பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் என்ற இசை வகைகள் யாவும் மதுரமுடைய ஒலியில் அமைந்த தாளம், இசை, தூக்கு நடை முதலிய கதிகளோடு பண் பொருத்தமுற எழும் ஓசையே குழல் இசை. பெரியபுராணத்திலிருந்து...